ஆண்டுதோறும், சர்வதேச நட்பு தினம் ஜூலை 30 அன்று கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்தியா, மலேசியா, அமெரிக்கா மற்றும் பங்களாதேஷ் போன்ற சில நாடுகளில் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது, இது 2023 இல் ஆகஸ்ட் 6 அன்று வருகிறது.
சர்வதேச நட்பு தினம் 2023- வரலாறு:
சர்வதேச நட்பு தினம் முதன்முதலில் 1958 இல் கொண்டாடப்பட்டது. அதே ஆண்டில் பராகுவேயில் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பான World Friendship Crusade மூலம் சர்வதேச நட்பு தின யோசனை முன்மொழியப்பட்டது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஜூலை 30 ஐ சர்வதேச நட்பு தினமாக 2011 இல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தீம் -Sharing the human spirit through friendship."